Sunday, August 15

ரஹ்மானிய்யாஹ் குர்ஆன் பாடசாலை புனருத்தாரனம்.

'உதவுங்கள் அல்லாஹ் உங்களை ஈருலகிலும் உயர்த்துவான்'
புதிய காத்தான்குடி ஜென்னத் மாவத்தை பாவா லேனில் இயங்கிவரும் அல் மத்ரஸதுல் ரஹ்மானிய்யாஹ் புனித குர்ஆன் பாடசாலையை புனருத்தாரனம் செய்து புதிதாக அமைப்பதற்கு அப்துல் ஜவாத் ஆலிம் நிதியம் அதி சங்கைக்குரிய ஞானபிதா அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களின் ஆலோசனையுடன் தீர்மானித்துள்ளது.



மிகவும் பின்தங்கிய பகுதியான புதிய காத்தான்குடி ஜென்னத் மாவத்தையில் சுமார் 160 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு புனித குர்ஆனை சரியாக ஓதுவதற்கு கற்றுக் கொடுத்துவரும் இந்தப் படசாலையானது கடந்த காலங்களில் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டு அப்துல் ஜவாத் ஆலிம் நிதியத்தினால் மீளமைக்கப்பட்டதுடன்

தற்போது இங்கு பெருகிவரும் மாணவர்களை வைத்து அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இருக்கும் பராமரிப்பு சிரமங்களை மனதில் கொண்டு மேற்படி நிதியம் அதனை அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டிடமொன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. 

தொடர்புகளுக்கு
செயலாளர் 
 ஏ.எம். பாயிஸ் - மத்ரஸத்துல் ரஹ்மானிய்யாஹ்
செல்லிடப்பேசி இல. +94 77 50 35106
அப்துல் ஜவாத் ஆலிம் நிதியம் : +94 65 224 5625 
இலங்கை

Bank Account (Saving)
Al Madhrasathur Rahmaniyyah Holy Qur’aan School
Account No: 207-073942-2
Peoples' Bank
Kattankudy Branch (Branch No.65)
Sri Lanka

இந்தக் குர்ஆன் பாடசாலையை புதிய கட்டிடமாக கட்டுவற்கு அதற்கு பக்கத்தில் உள்ள காணியை உடனடியாக விலைக்கு வாங்க வேண்டிய தேவையுள்ளது இதற்காக உடனடியாக இலங்கை ரூபா பத்து இலட்சம் (USD 8734) தேவையாக உள்ளது.

இதற்காக நீங்களும் உங்கள் பங்களிப்பினை செய்யுமாறு நாம் பணிவுடன் வேண்டிக் கொள்வதுடன் நீங்கள் வெளிநாட்டிலிருந்தால் இலங்கையிலுள்ள உங்கள் உறவினர்கள் மூலமோ அல்லது உங்கள் உதவியினை கீழுள்ள வங்கிகணக்கிற்கு இடுவதன் மூலமோ உங்கள் பங்களிப்பைச் செய்யலாம்.

உங்கள் பங்களிப்பு மிகவும் சிறிய தொகையாக இருப்பினும் அது இறைவனிடமும் குறித்த குர்ஆன் மத்ரஸாவுக்கும் மிகவும் பெரியதாக இருக்கும்.

இன்றே உங்கள் உதவிகள் அல் மத்ரஸத்துல் ரஹ்மானிய்யாஹ் குர்ஆன் பாடசாலைக்கு அனுப்புங்கள் ஈருலகிலும் உயருங்கள்

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK