தெளஹீதின் தளமாகவும் அல்லாஹ்வின் நேசர்களின் பதியாகவும் காத்தான்குடியில் இலங்கும் பத்ரியா ஜூம்மாப் பள்ளிவாயலில் கடந்த 01.08.2010 ஞாயிற்றுக் கிழமை ஏழைகளின் தோழர் அஜ்மீர் அரசர் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி (றழி) அவர்களின் மகா கந்தூரியுடன் மௌலவி ரப்பானி பட்டமளிப்பு விழாவும் அதி சங்கைக்குரிய ஞானபிதா அப்துர் ரஊப் மிஸ்பாஹி பஹ்ஜி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக இலங்கை மகளீர் விபகார சிறுவர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.ஏ.எல்.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களும் மற்றும் சில அரசியல் பிரமுகர்கள் காத்தான்குடி உலமாசபை உலமாக்கள் ஆகியோர் கந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் மூன்று மௌலவிமார்கள் மௌலவி பாஸில் 'ரப்பானி' பட்டம் பெற்றுக் கொண்டனர். 1. மௌலவி.ஏ.ஏ.எம். பயாஸ் (ரப்பானி) 2. ஏ.எச்.எம் குரைஸ் (ரப்பானி) 3. ஏ.ஜே.ஏ சம்ஹான் (ரப்பானி)
இந்நிகழ்வில் மகளீர் விபகார பிரதி அமைச்சர் உரையாற்றுகையில் 'எட்டு வருடம் படித்து வெளியேரும் மௌலவிகள் இஸ்லாமிய ஒற்றுமையின் மற்றும் சமாதானத்தின் படிகளாக திகழவேண்டும் என்றார் அத்துடன் இதுவரை இந்தக் கலாசாலை (அல் குல்லியத்துர் ரப்பானியாஹ்) யிலிருந்து 33 மௌலவிகள் வெளியாகி உள்ளனர்' என்பதையும் நினைவு படுத்தினார்.
பிரதி அமைச்சரின் உரையைத் தொடரந்து சங்கைக்குரிய ஞானபிதா சிறியதொரு மார்கப் பிரசங்கம் நிகழ்த்தினார்கள் (அவ்வுரை ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ளது) அதன்பின் தபர்றூக் வழங்கப்பட்டு கந்தூரி இனிதே நிறைவு பெற்றது.