கல்முனைக் கடற்கரைப் பள்ளி
கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகரத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள கல்முனை கடற்கரைப்பள்ளிவாயல் என்றும் கொடியேற்றப்பள்ளிவாயல் என்றும் இப்பிரதேச மக்களால் அழைக்கப்படும் இப்பள்ளிவாயலானது கஞ்சே சவா நாகூர் நாயம் சாகுல் ஹமீது பாதுஷா அவர்கள் வந்து கல்வத்து இருந்த இடமாகும்.
இங்கு சங்கைகுரிய நாயகம் அவர்கள் பாவித்த புனிதமாக பொருட்களும் அவர்கள் கல்வத்து இருந்த இடமும் உள்ளது
இப்பள்ளிவாயலில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் (ஜ.அவ்வல் 30ம் நாள்) கொடியேற்றப்பட்டு நாகூர் ஆண்டகை அவர்களின் மௌலீது வைபவம் 12 தினங்கள் நடாத்தப்படுகின்றது.
இவ்விடத்தில் வீசேட அம்சம் என்னவெனில் இங்கு இந்தக் கொடியேற்றம் ஆரம்பித்ததிலிருந்து பாவாமார்களால் றிபாயீ ராத்திப் நடாத்தப்பட்டு குத்துவெட்டும் இடம் பெறுகின்றமையாகும்.